
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் வருகிற வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. உலகின் தலைசிறந்த இரண்டு அணிகள் இப்போட்டிடில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சேவாக் “வரும் 18ஆம் தேதி தொடங்கும் போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் நம்பும் ஒரு விசயம், நீங்கள் உங்களுடைய பலத்துடன் விளையாட வேண்டும் என்பதுதான். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அது சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், 4ஆவது மற்றும் 5ஆவது நாளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்பத்தக் கூடும் என நம்புகிறேன்.