
கடந்த வருட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்து, லீக் சுற்றுடன் தொடரில் இருந்தும் வெளியேறியது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலியும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்றது. இந்திய அணி அடுத்தடுத்து பல வெற்றிகளை பெற்றதால் இந்திய அணியில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது, இந்த முறை இந்திய அணி அசால்டாக டி20 உலகக்கோப்பையை வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை சமாளிக்க முடியாத இந்திய அணி, டி.20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா போன்ற அசுரபலம் கொண்ட அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ளும், பேட்டிங் ஆர்டரில் நிலவி வரும் பிரச்சனைகள் எப்பொழுது தான் சரி செய்யப்படும் என கேள்வி வலுத்து வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.