இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டது - இயன் போத்தம்!
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிமேற்கொன்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போது நீங்கள் இந்தியாவுக்கு சென்று பாருங்கள் அங்குள்ள மக்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதில்லை.
Trending
இப்பொது எல்லாம் ஐபிஎல் மீது தான் அவர்களுடைய ஆர்வம் இருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது. அது நிச்சயம் கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் ஐபிஎல் தொடர் உங்களுக்கு எவ்வளவு காலம் தான் கை கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது.
அது எங்கேயும் செல்லாது. டெஸ்ட் கிரிக்கெட் அழிந்தால் நாம் கிரிக்கெட்டும் சேர்ந்து அழிந்து விடும். டெஸ்ட் போட்டி இல்லை என்றால் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணமே இருக்காது. டெஸ்ட் கிரிக்கெட் மீதுதான் அனைத்து வீரர்களுக்கும் கவனம் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது இந்தியாவில் நான்கு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்கள். ஆனால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவ நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது. ஏனென்றால் அவர்கள் வித்தியாசமான ஆடுகளத்தில் விளையாட இருக்கிறார்கள். ஸ்மித் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி தற்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட போவதாக அறிவித்துள்ளார்.இது நிச்சயம் நல்ல விஷயம்.ஏனென்றால் ஸ்மித் எதிர்காலத்தை குறித்து யோசிக்கிறார் என்று” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now