அவர் சிறந்த பேட்ஸ்மேன் மட்டும் தான், கேப்டன் கிடையாது - இயான் சேப்பல் !
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேனே தவிர, கேப்டன் கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியானது இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது போட்டியிலும் தற்போது ஆஸ்திரேலியா வெற்றிக்கு மிக அருகில் உள்ளது.
Trending
இந்நிலையில் இந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் சேப்பல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஜோ ரூட் ஒரு பேட்ஸ்மேனாக எக்சலன்ட்டான வீரர். ஆனால் கேப்டனாக அவர் ஒரு சிறந்த வீரர் கிடையாது. ஏனெனில் அவருக்கு கிடைத்திருக்கும் இங்கிலாந்து அணியானது சிறப்பான அணி. அதில் அவர் லக்கியாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
உண்மையாக ஒருவீரர் நீண்ட நாள் கேப்டனாக இருக்க வேண்டுமெனில் அணி எந்த நிலையில் இருந்தாலும் சரி செய்யும் குணாதிசயம் இருக்க வேண்டும். ஆனால் ஜோ ரூட் அப்படிபட்டவர் கிடையாது என்றே சொல்லலாம். இருப்பினும் அவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now