‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலபடுத்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கியுள்ளது. மொத்தம் 9 அணிகள் இத்தொடரில் விளையாடின.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
Trending
ஏற்கெனவே நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், ஜூன் 2ஆம் தேதி விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்று, அங்கு 10 நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
தற்போது பெரியளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சமனில் முடிவடைந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அதற்கான விதி முறையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி போட்டி ஒருவேளை சமனில் முடிவடைந்தால், இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஒருவேளை மோசமான வானிலை, வெளிச்சமின்மை போன்ற பிரச்சனைகளால் போட்டி முன்கூட்டியே நிறுத்தப்பட்டாலோ அல்லது ஒரு நாளுக்கு உண்டான போட்டி ஒத்திவைக்க பட்டாலோ ரிசர்வ் டே எனப்படும் முறைப்படி ஆறாவது நாள் போட்டி நடைபெறும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசியின் இந்த விதிமுறைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now