Advertisement

டி20 உலகக்கோப்பை: அணிகளுக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

Advertisement
ICC Announces T20 World Cup 2022 Prize Money!
ICC Announces T20 World Cup 2022 Prize Money! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 30, 2022 • 06:12 PM

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 30, 2022 • 06:12 PM

முதல் சுற்றில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குரூப் சுற்றுக்கு முன்னேறும்.

Trending

சூப்பர் 12 சுற்று ஏ, பி என இரண்டு பிரிவுகளாக தலா ஆறு அணிகளுடன் பிரிக்கப்பட்டு விளையாடப்படும். இரண்டு சுற்றிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13.05 கோடி) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதேசமயம் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும் (6.53 கோடி), அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் (3.27 கோடி) வழங்கப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர் வழங்கப்படும். சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்(57 லட்சமும்) வழங்கப்படும். தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 45.67 கோடி) ஆகும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement