டி20 உலகக்கோப்பை: ரசிகர்களின் நடத்தை குறித்து விசாரிக்கு அமீரக கிரிக்கெட் கிளப்பிற்கு ஐசிசி உத்தரவு!
டிக்கெட்டுகள் இன்றி மைதானங்களில் நுழைய முயன்ற ரசிகர்களின் நடத்தையை எமீரேட்ஸ் கிரிக்கெட் கிளப் விசாரிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பையின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் டிக்கெட்டுகள் இன்றி போட்டியை மைதானத்தில் காண வந்தன என்ற குற்றச்சாட்டை ஐசிசி முன்வைத்துள்ளது.
Trending
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் போட்டியைக் காண 16ஆயிரம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் அனுமதியின்றி மைதானத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் துபாய் காவல்துறை மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மைதானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, கூட்டத்தை கலைக்க மற்றும் நிலைமையை அமைதிப்படுத்த குறிப்பிடத்தக்க கூடுதல் ஆதாரங்களை கொண்டு வந்தனர்.
ஏறக்குறைய இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8.30 மணி), துபாய் காவல்துறை அனைத்து வாயில்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும், மைதானத்திற்குள் பாதுகாப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலைப் பராமரிக்க மேலும் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தியது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
அதன்படி இரவு நடந்த இந்நிகழ்வு குறித்து எமீரேட்ஸ் கிரிக்கெட் கிளப் விசாரணை மேற்கொள்ளுமாறு ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இனியும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது .
Win Big, Make Your Cricket Tales Now