
அபுதாபி டி10 லீக்கில் வெடித்த மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை; ஐசிசி அதிரடி நடவடிக்கை! (Image Source: Google)
அபுதாபி டி10 லீக்கின் 2021 தொடரின் போது பல்வேறு ஊழல்கள் செய்ததாக இந்திய அணியின் உரிமையாளர்களான பராக் சங்வி மற்றும் கிரிஷன் குமார் சவுத்ரி உட்பட எட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இரண்டு இந்தியர்களும் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்கள் மற்றும் அந்த சீசனில் அவர்களது வீரர்களில் ஒருவரான முன்னாள் வங்கதேச டெஸ்ட் வீரர் நசீர் ஹொசைன் லீக்கின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டனர்.
இதே போன்று, இந்தியாவை சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் , சன்னி தில்லான் ஊழல் புகாரில் சிக்கி உள்ளார். 2021 அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அந்த போட்டியின் போட்டிகளை ஊழல் செய்ய முயற்சித்த போது தான் இவர்கள் சிக்கி உள்ளனர்.