
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது காலத்தின் வளர்ச்சிகேற்ப அடிப்படை விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலுவையில் இருக்கும் அடிப்படை விதிமுறைகளில் 3 புதிய மாற்றங்கள் செய்யப்படுவதாக ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றி சௌரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி பரிந்துரைகளின் படி இந்த புதிய மாற்றங்கள் வரும் ஜூன் 1இல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி மற்றும் ஜூன் 7இல் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்துநடைமுறைக்கு வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது களத்தில் இருக்கும் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை மறுபரிசலைகளை செய்ய டிஆர்எஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அதை பயன்படுத்தி டிஆர்எஸ் எடுக்கும் போது களத்தில் இருக்கும் நடுவர் 3ஆவது நடுவரிடம் சோதிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு முன்பாக தம்முடைய தீர்ப்பை (சாப்ஃட் சிக்னல்) இணைத்து மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைப்பார்.