
ICC Names Joe Root Men's Test Cricketer Of The Year For 2021 (Image Source: Google)
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வரிசையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்தது. அதன்படி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன், இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே ஆகியோரது பெயர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் உள்பட 1,708 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..