ஐசிசி தரவரிசை: கோலியை முந்திய பாபர் அசாம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் வீரர்களுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீரர்கள் தவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்ராவது ஒருநாள் போட்டியில் 150 ரன்களை விளாசியதன் மூலம் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இப்பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 2,3 ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். மேலும் இப்பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாள ட்ரெண்ட் போல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேசமயம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசயில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலும், முகமது நபி, கிறிஸ் வோக்ஸ் 2,3ஆவது இடங்களையும் பிடித்துள்ளனர். இதில் ரவீந்திர ஜடேஜா 9ஆவது இடத்தில் நீடித்து வருகிறார்.
Win Big, Make Your Cricket Tales Now