மகளிர் ஒருநாள் தரவரிசை: இடங்களைத் தக்கவைத்த மிதாலி, கொஸ்வாமி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதில், பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 738 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ (761 புள்ளி) முதலிடமும், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி (750 புள்ளி) 2ஆவது இடமும் வகிக்கின்றனர்.
Trending
ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தில் உள்ளார் (10 ஆயிரத்துக்கும் மேல்) என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 727 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்தார். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் 760 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now