
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
- இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)