Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 368 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2023 • 17:55 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: போட்டிப்போட்டு சதமடித்த வார்னர், மார்ஷ்; பாகிஸ்தானுக்கு 368 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் ஆறு ஓவர்களை கடந்தனர். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய இருவரும் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை குவித்தது.

Trending


அதன்பின்னும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி இருவரும் போட்டிபோட்டு பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் உலகக்கோப்பை தொடரில் தனது 5ஆவது சதத்தையும், அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் தனது முதல் உலகக்கோப்பை சதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.

இப்போட்டியில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 259 ரன்களை குவித்தனர். அதன்பின 10 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 121 ரன்களை விளாசிய மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது முதல் பந்திலேயும், ஸ்டீவ் ஸ்மித் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி டேவிட் வார்னர் 150 ரன்களைத் தாண்டினார். அதன்பின் 14 பவுண்டரி 9 சிக்சர்கள் என 163 ரன்களைச் சேர்த்த டேவிட் வார்னர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 13 ரன்களிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 21 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 8 ரன்களுக்கும் என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து சோபிக்க தவறினர்.   

இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளையும், ரன்களை வாரிவழங்கிய ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement