-mdl.jpg)
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுதன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 46 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.