ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
அந்தவகையில் நாளை ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் காலை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கெனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் விளையாடவுள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வங்கதேசம்
- இடம் - ஹிமாச்சல் பிரதேஷம் கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
- நேரம் - காலை 10.30 மணி (GMT 0500)
போட்டி முன்னோட்டம்
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தங்களது முதல் லீக் ஆட்டத்திலேயே படுதோல்வியைச் சந்தித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதிலும் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் போன்றோர் பேட்டிங்கில் சோபிக்காதது அந்த அணியின் தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தது.
அந்த அணி பேட்டிங்கில் தான் சொதப்பியது என்று பார்த்தால் பந்துவீச்சில் சாம் கரனைத் தவிர மற்ற எந்தவொரு பந்துவீச்சாளரும் விக்கெட்டை கைப்பற்றவில்லை. அதிலும் அதிவேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் போன்றவர்களாலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாதது அணியின் தோல்விக்கு வித்திட்டது. இதனால் முந்தைய போட்டியில் செய்த தவறுகளை திருத்தி இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
அதேசமயம் ஆஃப்கனுக்கு எதிரான தங்களது முதல் போட்டியிலேயே அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகத்துடன் வங்கதேச அணி இப்போட்டியில் விளையாடவுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் லிட்டன் தாஸ், தஸித் ஹசன், ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுள்ளா, முஷ்பிகூர் ரஹீம் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோர் அல் ரவுண்டர்களாக அசத்தி வருகிறார்கள். அவர்களுடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் பந்துவீச்சில் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அணி அதிர்ச்சி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மைதானம் எப்படி
பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும் தரம்சாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் அதிக ஸ்கோரிங் போட்டிகளை இங்கே காணலாம். இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 24
- இங்கிலாந்து - 19
- வங்கதேசம் - 05
உத்தேச லெவன்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், மொயின் அலி, ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், மார்க் வுட்.
வங்கதேசம்: தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிகுர் ரஹீம், தௌஹீத் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்ஸ்மேன்கள்- ஜோ ரூட் (துணை கேப்டன்), நஸ்முல் ஹுசைன் சாண்டோ, டேவிட் மலான்
- ஆல்-ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் கரன், மெஹிதி ஹசன் மிராஜ்
- பந்துவீச்சாளர்கள்- கிறிஸ் வோக்ஸ், ஷோரிஃபுல் இஸ்லாம்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now