Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2023 • 23:00 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளதால் எந்த அணி வெற்றிபெற்று மீண்டும் தங்களது வெற்றி கணக்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்ட இங்கிலாந்து அணிக்கு இத்தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடம் படுதோல்வியைச் சந்தித்தது கடும விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அணியின் பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன் என வலிமையான பேட்டிங் இருந்த பட்சத்திலும் அந்த அணியால் வெற்றியை ஈட்டமுடியவில்லை. பந்துவீச்சிலும் ரீஸ் டாப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷித, சாம் கரண் ஆகியோரும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றன.

மேலும் காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் விளையாடமல் இருப்பதும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் இன்றைய தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் நளைய போட்டியில் விளையாடுவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபக்கம் நடப்பு உலகக்கோப்பை தொடரை அதிரடியாக தொடங்கிய டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் அந்த அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளது. 

அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வேண்டர் டுசென், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் ஆகியோரும் பந்துவீச்சில் லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜ் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு அணிகளும் கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் இங்கு பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகவே உள்ளது.  

அதனால் கால சூழ்நிலையில் புரிந்து நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடிக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. மேலும் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் பந்துவீச்ச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 69
  • இங்கிலாந்து - 30
  • தென் ஆப்பிரிக்கா - 33
  • முடிவில்லை - 06

உத்தேச லெவன்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட், ரீஸ் டாப்லி.

தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக் (கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள்- டேவிட் மில்லர், ஜோ ரூட், டேவிட் மாலன் (துணை கேப்டன்), ஹாரி புரூக்
  • ஆல்ரவுண்டர் - ஐடன் மார்க்ரம், லியாம் லிவிங்ஸ்டோன், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள்- கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, மார்க் வுட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement