Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 07, 2023 • 14:40 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது  சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. 

இதில் நாளை நடைபெறவுள்ள 5ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலகின் இருபெரும் ஜாம்பவான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த வருடம் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா அணிக்கு மிகச்சிறந்த அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து நம்பிக்கையை தருகிறார். மேலும் விராட் கோலி தன்னுடைய பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். கேஎல் ராகுலின் அனுபவம் மற்றும் தரம் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் 4ஆவது இடத்திற்கான போட்டியில் உள்ளனர். இந்திய சூழ்நிலையில் இவர்களை நடுவரிசையில் தேவைக்கு தகுந்தபடி ஆட வைக்க அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. 

ஆறாவது இடத்தில் யாருக்கும் கிடைக்காத அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்த வகையில் பேட்டிங் யூனிட் மிக பலமாக இருக்கிறது. இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்கும் பத்து அணிகளில் முதலிடம் இந்திய பவுலிங் யூனிட்டுக்கு தரலாம். வேகப்பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, ஹர்திக் என உலக தரத்தில் இருக்கிறார்கள். மேலும் சுழற் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

இவர்களால் எந்த நேரத்திலும் ஆட்டத்தில் விக்கெட்டை எடுக்க முடியும். இது மற்ற அணிகளின் பவுலிங் யூனிட்டில் பார்க்க முடியாத ஒன்று. இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிகப்பட்டுள்ள தொடக்க வீரர் ஷுப்மன் கில் நாளைய போட்டியில் விளையாடுவாரா என்பது உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் நாளை இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பட் கமின்ஸ் வேகப்பந்து வீச்சு துறைக்கு தலைமை தாங்குகிறார். அவருடன் கடந்த 2 ஒருநாள் உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்த மிட்சேல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், நாதன் எலிஸ், சீன் அபோட் ஆகியோரால் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு துறை இந்திய மண்ணில் மிரட்டும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

அவர்களை விட மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்சேல் மார்ஷ், கேமரூன் க்ரீன் ஆகிய 3 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் துறையை கவனித்துக் கொள்ளும் திறமைமிக்க ஆல் ரவுண்டர்களாக ஆஸ்திரேலிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். சொல்லப்போனால் உலகின் எதிரணிகளை காட்டிலும் இப்படி 3 வேகப்பந்து ஆல் ரவுண்டர்கள் இருப்பது ஆஸ்திரேலியாவின் தனித்துவமான பலமாகும்.

இந்த மூவருமே அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்கள் என்ற நிலைமையில் கிளன் மேக்ஸ்வேல் சரவெடியாக பேட்டிங் செய்யும் திறமையுடன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியை மேலும் வலுப்படுத்துகிறார். அதே போல அனுபவம் மிகுந்த ஆடம் ஸாம்பாவுடன் எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுப்பதற்காகவே இளம் வீரர் தன்வீர் சங்கா தேர்வாகியுள்ளார்.

இவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி மிடில் ஆர்டரை பார்த்துக் கொள்வதற்காக தயாராக இருக்கிறார். இதனால் நாளைய போட்டியில் நிச்சயம் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளார். 
  
மைதானம் எப்படி

இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனாலேயே இங்கு வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் 231 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2ஆவது இன்னிங்ஸில் 218 ரன்கள் குறைகிறது. மேலும் இங்கு 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 149
  • இந்தியா - 56
  • ஆஸ்திரேலியா - 83
  • முடிவில்லை - 10

உத்தேச லெவன்

இந்தியா : ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குலதீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.  

ஆஸ்திரேலியா : மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மெக்ஸவெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹெசில்விட், ஆடம் ஸாம்பா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ்
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், கிளென் மேக்ஸ்வெல் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்  

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement