Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 18, 2023 • 14:22 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன்  தலைமையிலான வங்கதேச அணியும் புனேவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த சில தினங்களாக நெதர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வலுவான அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.  

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம் 
  • இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம், புனே
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)  

போட்டி முன்னோட்டம்

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் துறையில் லிட்டன் டாஸ் அதிரடியாக விளையாடும் வீரராக பலம் சேர்க்கிறார். அவருடன் நஜ்முல் சான்டோ, டன்சித் ஹசன், தவ்ஹீத் ஹ்ரிடாய் ஆகிய இளம் வீரர்களுடன் நட்சத்திர அனுபவ வீரர் முஸ்ஸ்பிக்கர் ரஹீம் வெற்றிக்காக போராட தயாராக இருக்கிறார். அதைவிட சுழல் பந்து வீச்சு துறையில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மெஹதி ஹசன் ஆகியோர் வங்கதேசத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள்.

குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றிய மெஹதி ஹசன் தற்போது நல்ல ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் தஸ்கின் அகமது, மொத்த முஸ்தஃபிஷர் ரகுமான் ஆகிய தரமான வீரர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களுடன் ஹசன் முகமது, தன்சிம் ஹசன் மாற்றும் சோரிபுல் இஸ்லாம் ஆகியோரம் சமீபத்தியாக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பைக்கு தேர்வாகியுள்ளனர். 

மறுபுறம் இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் சமீபத்திய போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதே போல ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் எதிரணிகளை தெறிக்க விடும் நிலையில் ஷார்துல் தாக்கூர் கிடைக்கும் வாய்ப்பில் தனது வேலையை செய்கிறார். 

மேலும் ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை தங்களுடைய தரமான சுழலால் திணறடித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விடும் அளவுக்கு வேகத்தில் மிரட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் கடந்த சில நாட்களில் வலுவான அணிகளை தோற்கடித்தது போல இந்தியாவுக்கு இப்போட்டியில் வங்கதேசம் சவாலை கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் சொந்த மண்ணில் தரமான ஆஸ்திரேலியா, பாகிஸ்தானையே தெறிக்க விட்ட இந்தியா நிச்சயம் வங்கதேசத்தையும் அடித்து நொறுக்கி வெற்றி காண்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது.

பிட்ச் ரிப்போர்ட்

புனே மைதானம் பேட்டிங்கு சாதகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பவுண்டர்களின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி நன்கு செட்டிலானால் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். அதனாலேயே இங்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 307 ரன்களாக இருக்கிறது. அதே சமயம் இங்குள்ள பிட்ச்சில் கிடைக்கும் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் வழக்கமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் வழக்கமான ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 40
  • இந்தியா - 31
  • வங்கதேசம் - 08
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், மெஹதி ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), முஷ்பிக்கூர் ரஹீம், தாஹீத் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர் - ஷாகிப் அல் ஹசன் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, மெஹிதி ஹசன் மிராஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement