
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உறுதிசெய்துள்ளன. அதேசமயம் மீதமுள்ள இரு இடங்களைப் பிடிக்க நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கே அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - காலை 10.30 மணி (GMT 0500)