Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!

இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2023 • 20:33 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: அரையிறுதியில் நியூசிலாந்து? வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டிக்குப் பின் நியூசிலாந்து அணியும் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

அதன்ப்டி இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில்டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு துவக்க வீரர் குசால் பெரேரா அதிரடியாக 51, மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்கள்.மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

Trending


அதை தொடர்ந்து 172 என்ற சுலபமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதை விட இந்த வெற்றியால் 10 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை 99.9% உறுதி செய்து விட்டது.

 

ஏனெனில் நியூசிலாந்தின் வெற்றியால் 5ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 275 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் பெற்றால் மட்டுமே நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement