ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டாத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. முன்னதாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இலங்கை அணி வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியிருந்தது. அத்தோல்விக்கு பாகிஸ்தான் அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இலங்கை
- இடம் - ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும், பாகிஸ்தான் அணி நெதர்லாந்தின் பந்துவீச்சில் சற்று தடுமாறியது. பாகிஸ்தான் 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை எடுத்துத் தடுமாறியது. இறுதியில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீலின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு தேவையான அளவுக்கு ரன்கள் குவித்தது என்றே கூறலாம். அணியின் பேட்டிங்கில் பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், இமாம் உல் ஹக் போன்றோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் ஷாஹின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவூஃப், ஹசன் அலி ஆகியோரு இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் பேட்டிங்கில் குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தசுன் ஷன்கா ஆகியோர் அதிரடியாக செயல்பட்டது அணிக்கு நம்பிக்கை தரும் விசயமாக பார்க்கப்பட்டாலும், டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை முதல் போட்டியிலேயே கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக கசுன் ரஜிதா, மதீஷா பதிரானா, தில்சன் மதுஷங்கா போன்றோர் ரன்களை வாரிவழங்கியது அணியை பெரும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது. இருப்பினும் காயத்திலிருந்து மீண்டுள்ள மகேஷ் தீக்ஷானா நாளைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் இலங்கை அணி சரிவிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இலங்கை அணியும், வலுவான வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் களம் காணவுள்ளன. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நாளைய போட்டியில் இலங்கையை வீழ்த்தி பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சதாகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 156
- பாகிஸ்தான் - 92
- இலங்கை - 59
- முடிவில்லை - 04
- டை - 01
உத்தேச லெவன்
பாகிஸ்தான்: ஃபகார் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.
இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதிர சமரவிக்ரம், சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கே), துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, மதிஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள்: பாபர் ஆசாம், இமாம்-உல்-ஹக், சரித் அசலங்கா, பதும் நிஷங்கா
- ஆல்ரவுண்டர்கள் - தனஞ்சய் டி சில்வா, ஷதாப் கான் (கேப்டன்), துனித் வெல்லாலகே
- பந்துவீச்சாளர்கள்- கசூன் ராஜித, ஹரிஸ் ரவூஃப்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now