Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி ல
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி ல (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 15, 2023 • 10:58 PM

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 15, 2023 • 10:58 PM

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3ஆவது இடங்களைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலிருந்தே நெதர்லாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான சந்தித்த தோல்விகளை தவிர்த்து அதிரடியாக விளையாடும் வலுவான அணியாக இருக்கிறது. அந்த அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் கேப்டன் பவுமா மட்டுமே பின்னடைவை ஏற்படுத்துபவராக இருக்கிறார். மற்றபடி டீ காக், ஐடன் மார்க்ரம், வேன் டெர் டுஷன் ஆகியோர் டாப் ஆர்டரில் எதிரணி பவுலர்களை பந்தாடும் திறமையை கொண்டுள்ளனர். அவர்களை விட மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோர் அடித்து நொறுக்கி வேகமாக ரன்களை எடுத்து வருகின்றனர். 

அதேசமயம் மார்கோ ஜான்சென் இந்த உலகக்கோப்பையில் நல்ல வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதேபோல் தப்ரைஸ் ஷ்ம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கண்டிப்பாக மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். இவர்களுடன் காகிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி இங்கிடி, லிசார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் தரமான வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். 

மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடக்கூடிய தரமும் அனுபவமும் கொண்டுள்ள நிலையில் ஆல் ரவுண்டர் மிட்சேல் மார்ஷ் மீண்டும் இணைந்துள்ளது பேட்டிங், பவுலிங் துறையை வலுப்படுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் நங்கூரமாக விளையாடக்கூடிய கிளாஸ் நிறைந்தவர்களாக இருக்கும் நிலையில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லிஷ் அல்லது அலெக்ஸ் கேரி ஆகிய இருவருமே சுமாரான ஃபார்மில் இருப்பது பின்னடைவாகும்.

இருப்பினும் கிளன் மேக்ஸ்வெல் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் துறையில் அசத்தும் தன்மை கொண்டிருப்பதுடன் ஃபினிஷராகவும் செயல்படும் திறமையை கொண்டுள்ளது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பலமாகும். அதே போல ஆடம் ஸாம்பா இந்திய மைதானங்களில் எப்போதுமே அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் கேப்டன் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் ஆகியோர் தென் ஆப்பிரிக்க கூட்டணியை விட அனுபவமிக்க வேகப்பந்து வீச்சு கூட்டணியாக ஆஸ்திரேலியாவுக்கு வலுசேர்க்கின்றனர்.

மொத்தத்தில் இரு அணிகளுமே வெற்றியைப் பெறும் அளவுக்கு சமமான திறமை கொண்டுள்ளனர். ஆனால் இதில் தென் ஆப்பிரிக்காவை விட அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் சொதப்பாமல் வெற்றி காண்பதில் ஆஸ்திரேலியா கில்லாடியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 91/7 என சரிந்தும் வெல்லும் அளவுக்கு மன உறுதியைக் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கே இம்முறையும் சற்று அதிக வாய்ப்புள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 109
  • ஆஸ்திரேலியா - 50
  • தென் ஆப்பிரிக்கா - 55
  • முடிவில்லை - 04

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள்- டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரஸ்ஸி வான் டெர் டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சென் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, கேசவ் மகாராஜா, ஜெரால்ட் கோட்ஸி.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement