Advertisement
Advertisement

South africa vs australia

இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
Image Source: Google

இறுதிப்போட்டியை எதிர்நோக்கி கார்த்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!

By Bharathi Kannan November 16, 2023 • 23:41 PM View: 191

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்க தவறியதால் 212 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததோடு போட்டியையும் பரபரப்பாக்கி விட்டனர். இலகுவாக வெற்றி பெற வேண்டிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயத்தை கண் முன் காட்டும் அளவிற்கு தென் ஆப்ரிக்கா வீரர்கள் வெற்றிக்காக போராடினாலும், இலக்கு மிக குறைவானது என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமையாக விளையாடி 47.2 ஓவரில் இஅக்கை எட்டினர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 8ஆவது முறையாக உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

Related Cricket News on South africa vs australia