
ICC Promo for the WTC Finals between India and Australia! (Image Source: Google)
வரும் ஜூன் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இரு அணி வீரர்களும் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டி சார்ந்து ப்ரோமோ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியை ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸும் வழிநடத்துகின்றனர். இந்திய அணி கடந்த 2021இல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
v
— ICC (@ICC) June 2, 2023
7 to 11 June
The Oval
Are you ready for The Ultimate Test?#WTC23 pic.twitter.com/ybFgXUq0fT