
ICC rankings: Virat Kohli stays on top of ODI rankings, Jasprit Bumrah slips to fourth (Image Source: Google)
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார்.
இப்பட்டியலில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் நான்காவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் ஐந்தாவது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.