
ICC T20 World Cup: Zimbabwe restricted Bangladesh by 150 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரி சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று குரூப் 2 உள்ள அணிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி அந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் - சௌமியா சர்க்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய பிளெசிங் முசரபாணி, ரன் ஏதுமின்றி களத்தில் இருந்த சௌமியா சர்காரின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் களமிறங்கிய லிட்டன் தாஸ் 14, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 23 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.