
ICC T20I Rankings: KL Rahul moves to fifth spot, Kohli drops to eighth (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடாத கேஎல் ராகுல் , நமிபியா, ஸ்காட்லாந்து, ஆப்கன் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டிய்லை வெளியிட்டுள்ளது. இதில் 727 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு கேஎல்.ராகுல் முன்னேறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அரைசதம் அடித்த விராட் கோலி, அதன்பின் நடந்த போட்டிகளில் சொதப்பியதால், 698 புள்ளிகளுடன் 8ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் மார்க்ரம், தரவரிசையில் 796 புள்ளிகளுடன் 3ஆஅவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.