
இந்திய அணி தற்போது மேற்கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் பேட்டிங்கில் அறிமுக வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடிக்க, விராட் கோலி அரை சதம் எடுத்தார்.
பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து மற்றும் ஏழு விக்கட்டுகளை கைப்பற்றி மொத்தம் 12 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியின் முடிவுக்குப் பிறகு இந்த நால்வரின் டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் மற்றும் இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் விராட் கோலி 14 ஆவது இடத்தில் டெஸ்ட் பேட்மேன்களுக்கான இடத்தில் தொடர்கிறார்.
அதேசமயத்தில் சதம் அடித்த கேப்டன் ரோஹித் சர்மா முதல் 10 இடங்களுக்குள் அதாவது பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் 73ஆவது இடத்தை தனது முதல் ஆட்டத்திலேயே பெற்றிருக்கிறார்.