ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டி டிராவிலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இரண்டு இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Trending
இந்திய அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்ததன் மூலம் இவர் தரவரிசைப் பட்டியலில் முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
Joe Root rises to No.2
— ICC (@ICC) August 18, 2021
Babar Azam moves up two spots
The latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings for batting
https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/ERYzCGm9Pc
அதேபோல் இதில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஐந்தாவது இடத்திலும், லார்ட்ஸ் டெஸ்டில் சதமடித்த கே.எல்.ராகுல் 19 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now