
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியில் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக அபார வெற்றியைப் பெறுவதில் அனுபவ வேகப்பந்து வீச்சாளார் முக்கிய பங்கினை வகித்தார். அவர் தனது அபாரமான பாந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தனது 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் எனும் சாதனைகளையும் படைத்தார். மேற்கொண்டு ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஜாகீர் கானின் சாதனையையும் முகமது ஷமி தகர்த்துள்ளார்.
இந்நிலையில் ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரையில் முகமது ஷமி ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறுகிறார் என முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி தொடர்களும் முகமது ஷமியும் - இது ஒரு சிறந்த காதல் கதை. அவர் ஐசிசி போட்டிகளில் விளையாடும் போதெல்லாம், அவர் முற்றிலும் மாறுபட்ட பந்து வீச்சாளராக மாறுகிறார். மேலும் அவர் தற்போது தான் காயத்திலிருந்து மீண்டுள்ளார். சமீபத்திய தொடரிலும் அவர் சிறப்பாக தெரியவில்லை.