Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!

ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 20, 2023 • 12:24 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை விவரம்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக வென்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவற விட்டிருக்கிறது. இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் தொடர்ந்து பத்து போட்டிகளில் ஆடிய இந்திய அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டியில் இந்தியா தோற்றத்திற்கு காரணம் ஆடுகளம் மோசமான முறையில் அமைக்கப்பட்டது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பத்து போட்டிகளில் இந்திய அணி ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு கடைசியில் இதுபோல் ஒரு மோசமான ஆடுகளத்தில் விளையாடியதால் தான் இந்திய அணி தோற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

Trending


இந்த நிலையில் ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு 16 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று அரையிறுதியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்துக்கு ஆறரை கோடி ரூபாயும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆறரை கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இது தவிர அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் சுற்றில் வெளியேறிய ஆறு அணிகளுக்கும் தலா 83 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு வெற்றிக்கு தலா 33 லட்சம் ரூபாய் என்ற பரிசுத்தொகை தனியாக வழங்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement