பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா இதனை செய்ய வேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்த இந்தியா இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இருவரும் மோதியபோது பாகிஸ்தான அணி இந்தியாவை எளிதில் வீழ்த்தியது. இதனால் பதிலடி தர வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்காட் ஸ்டைரிஸ் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான அணி இரண்டு தொடக்க வீரர்களை நம்பியே இருக்கின்றனர். பாபர் ஆசாம்,முகமது ரிஷ்வான் ஆகியோர் ஓப்பனிங்கில் களம் இறங்கி அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை தருவார்கள். அதன் பிறகு ஃபக்கர் சமான் உள்ளிட்ட வீரர்கள் களத்திற்கு வந்து ரன் குவிக்க முயற்சி செய்வார்கள்.
Trending
பாகிஸ்தான் எப்படி போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்து, அதன்படி விளையாடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும்.
இவ்விரு வீரர்களையும் அந்த அணி பெரிதும் நம்பியுள்ளதால், அவர்களை வீழ்த்தி பாகிஸ்தான் நடு வரிசை வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே களத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்”
பாகிஸ்தானுக்கு எது பிடிக்காதோ அதனை தான் இந்திய வீரர்கள் செய்ய வைக்க வேண்டும். சுழற் பந்துவீச்சை வைத்து ரிஸ்வான், பாபர் ஆசாமை சமாளித்து விடலாம் என்று நினைத்தால் அது கை கொடுக்காது. மறுபுறம் இந்திய அணி அதிரடியாக ஆடினாலும் போட்டியை எப்படி அணுகுவது என்ற தெளிவு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now