
ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி முடிந்தபிறகு இரு அணிகளின் வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும் நேரத்தில் பல்வேறு சண்டை சச்சரவுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக கம்பீர் மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியதோடு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இவர்கள் இருவருடனும் இந்திய அணியில் விளையாடியுள்ள முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சண்டையிட்டுக் கொண்ட விவகாரத்திற்கு கடுமையான கருத்தை முன்வைத்து, மோசமான உதாரணம் என்றும் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “போட்டி முடிந்த பிறகு நான் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு படுக்கச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் சமூக வலைதளங்களில் பார்த்தபிறகு இந்த விவகாரம் குறித்து தெரிந்து கொண்டேன். தோல்வியைப் பெற்ற அணியினர் அதை ஒப்புக்கொண்டு சென்றுவிட வேண்டும். வெற்றி பெற்ற அணியினர் சில நேரங்களில் இப்படித்தான் கொண்டாடுவார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இப்படி முன்கோபம் வெளிப்படுத்தக் கூடாது.