
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி யார் தொடரை வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியாக நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டியின் ஆடுகளத்தின் தன்மை பற்றிய எதிர்பார்ப்பும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது .
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்தே இந்திய அணி ஷுப்மன் கில் மற்றும் இசான் கிசான் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக பயன்படுத்தி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் இந்த இருவரும் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை . இதனால் மூன்றாவது டி20 போட்டியில் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக பிரீத்தி ஷா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.