
If Virat Kohli gets a fifty in the very first game, mouths will be shut for the rest of the tourname (Image Source: Google)
15ஆவது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது, இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி எந்தளவு எதிர்பார்க்கப்படுகிறதோ அதே அளவு விராட் கோலியும் இத்தொடரில் ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டன் விராட் கோலி சதமடிக்கவில்லை. கடந்த 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார் கோலி.