Advertisement

யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!

யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன்பிராவோ தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2023 • 20:49 PM
‘If you don’t have a yorker, you will not last long:’ Dwayne Bravo
‘If you don’t have a yorker, you will not last long:’ Dwayne Bravo (Image Source: Google)
Advertisement

டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக கருதப்பட்டவர் வெஸ்ட் இண்டீஸின் அணியின் டுவைன் பிராவோ. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ தற்போது அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழிங்கி இருக்கிறார். அதில் பேசிய பிராவோ, “என்னை கேட்டால் யாக்கர்தான் சிறந்தது என்று கூறுவேன். ஆனால், பந்துவீச்சாளராக யாக்கர் வீசுவதுதான் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் பல மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். பந்தை நேராக வீசுவது எப்படி, பந்தை சற்று நகர்த்தி விசுவது எப்படி என்பதை பயிற்சிகள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். 

Trending


பயிற்சிகள்தான் பந்துவீசும் முறைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு யார்க்கர் போடுவது தெரிந்திருக்க வேண்டும், அல்லது பந்துவீசும் வேகத்தில் 150+ஐ தொடும் பந்துவீச்சாளராக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்த கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடித்திருக்க முடியும். 

நீங்கள் 150-க்கு மேலான வேகத்தில் பந்து வீசினாலும், நீங்கள் யார்க்கரை நம்பியிருக்க வேண்டிய தருணம் வரும். உண்மையில் யாக்கர் போடுவதற்கு கடினமாக இருந்தாலும் அதுவே சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் எப்போதெல்லாம் அழுத்தத்தை உணர்கிறீர்களோ அப்போது நீங்க போட வேண்டியது யாக்கர்தான்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement