
ஐசிசி உலகக்கொப்பை தொடரில் நெற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது 2-ஆவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் இந்த போட்டியில் 124 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 163 ரன்கள் குவித்து அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான அட்டம் குறித்து பேசிய டேவிட் வார்னர், “இந்த போட்டியின் போது எனக்கு சிறிய அளவிலான தசை பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் முதல் விக்கெட்க்கு நான் மிட்சல் மார்ஷ்சுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் மிக அருமையாக இருந்தது. ஒரு முறை இந்த மைதானத்தில் பந்து வரும் விதத்தை கவனித்த பின்பு எனக்கு பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் எளிதாகி விட்டது.