
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது சிசன் ஐஎல்டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறகிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - உஸ்மான் கான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தனர். பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ரன்கள் ஏதுமின்றியும், ஜோர்டன் காக்ஸ் 2 ரன்களிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்தார்.
பின் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜேக்ஸ் வின்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கிறிஸ் ஜோர்டன் - ஜேமி ஓவர்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கிறிஸ் ஜோர்டன் 30 ரன்களையும், ஜேமி ஓவர்டன் 12 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்தது.