
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் இண்டர்னேஷ்னல் லீக் டி20 தொடரில் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - ஜேமி ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விலையாடி அணிக்கு அடித்தளம் அமைத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேமி ஸ்மித் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களிலும், 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்திருந்த ஜேம்ஸ் வின்ஸும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, ஜோர்டன் காக்ஸ் - உஸ்மான் கான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் தலா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கரிம் ஜானத் 17 ரன்களுக்கும், ஜேமி ஓவர்டன் 5 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர்.