
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா - முகமது வசீம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் முகமது வசீம் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசால் பெரேராவும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் டாம் பான்டன் மற்றும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தலா 15 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கீரென் பொல்லர்ட் தனது பங்கிற்கு 36 ரன்களையும், டேன் மௌஸ்லி 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் ரொமாரியோ ஷெஃபர்ட் 16 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கைக் கொடுக்க மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி தரப்பில் கேப்டன் லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வைப்பர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.