
ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - எம் ஐ எமீரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற எமீரேட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி பேட்டிங் செய்த அபுதாபி அணியில் பிராண்டன் கிங், கென்னர் லூயிஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ரெய்ஃபெர், அசலங்கா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என அடுத்தடுத்து கனிசமான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தனஞ்செய டி சில்வா அதிரடியாக விளையடை அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவரும் 65 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது.