
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - எம்ஐ எமீரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியிலுள்ள ஷேக் சயித் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே ஃபிளெட்சர் - முகமது வசீம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தின.
பின் 22 ரன்களில் ஃபிளெட்சர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கரும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் இருனத முகாமது வசீம் அரைசதம் கடந்த கையோடு 43 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்களை பறக்கவிட்டு 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.