
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதல் சீசன் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் - எம்ஐ எமீரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளெட்சர், பசில் ஹமீத் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது வாசீம் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் முகமது வாசீம் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த கேப்டன் பொல்லார்ட், நஜிபுல்லா ஸத்ரான், டுவைன் பிராவோ ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.