
ILT20: Shanaka, Sikandar Raza Steer Dubai Capitals To Victory Over MI Emirates (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் முதலாவதூ சீசன் ஐஎல்டி20 லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்ட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய எமிரேட்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 9, பாஸ் டி லீட் 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் 31 ரன்களிலும், லோர்கன் டக்கர் 21 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - மௌஸ்லி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் பூரன் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.