
ILT20 - Sharjah Warriors Beat Abu Dhabi Knight Riders By Four Wickets (Image Source: Google)
ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சைந் நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ கிளார்க் 7 ரன்களிலும், தனஞ்செயா டி சில்வா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 28 பந்துகளில் 3 சிக்சர்ஸ், ஒரு பவுண்டரி என 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தடு.