
நேற்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் வருவதற்கு பலமான அடித்தளத்தை போட்டு இருக்கிறது. இப்போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 57 பந்தில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பின்பு விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே மடமடவென்று விக்கெட்டுகளை விட்டு ஒன்பது விக்கெட்டுகளுக்கு 154 ரன்கள் மட்டும் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேறியது. சுப்மன் கில் தனது சத இன்னிங்ஸில் 13 பவுண்டரிகளையும் ஒரே ஒரு சிக்சரை மட்டும் அடித்திருந்தார். அந்த ஒரு சிக்ஸரும் தனது மாநில அணியான பஞ்சாப் அணிக்கு உடன் விளையாடும் சக வீரர் அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் அடித்திருந்தார்.
சதம் அடித்து போட்டியின் வெற்றிக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்று பேசிய ஷுப்மன் கில், “எனது ஐபிஎல் அறிமுகம் ஹைதராபாத் அணிக்கு எதிராகத்தான் நடந்தது. இப்பொழுது எனது ஐபிஎல் முதல் சதம் ஹைதராபாத் அணிக்கு எதிராகத்தான் வந்திருக்கிறது. இதுபோல இன்னும் நிறைய வரும் என்று நம்புகிறேன். இது பந்துவீச்சாளர்கள் மற்றும் சூழ்நிலை சம்பந்தப்பட்டது.