Advertisement

இப்போது அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன் - விராட் கோலி!

என்னுடைய பணிச்சுமையை குறைக்க இது சரியான நேரம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Advertisement
'I'm Not Going To Stand And Do Nothing': Kohli Vows Never To Change Despite Not Being T20I Captain
'I'm Not Going To Stand And Do Nothing': Kohli Vows Never To Change Despite Not Being T20I Captain (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 09, 2021 • 11:07 AM

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் கடைசி ஆட்டத்தில் நமீபியா அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 09, 2021 • 11:07 AM

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா அணியானது 132 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி ஆனது 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 136 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Trending

இந்த சூப்பர் 12-சுற்றின் முதல் இரண்டு போட்டிகளை மோசமாக இழந்த இந்திய அணியானது அடுத்த மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இருப்பினும் தலா 4 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணி இந்த உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக தனது கடைசி போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்றைய போட்டிக்கு பின்பு பேசியதாவது, “இப்போது அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக உணர்கிறேன். என்னுடைய பணிச்சுமையை குறைக்க இது சரியான நேரம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 6-7 ஆண்டுகளாக அதிக பணிச்சுமை காரணமாக அழுத்தத்தில் விளையாடி வந்தேன். எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த தொடரில் போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் நல்ல கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி உள்ளோம். நான் கேப்டனாக செயல்பட்ட போது எங்கள் அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியதால் எனக்கு கேப்டன்ஷிப் பணி சற்று எளிமையாகவே இருந்தது. கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். துவக்கத்திலேயே 2 ஓவர்கள் அதிரடியாக விளையாடினால் நிச்சயம் பெரிய ரன்கள் வரும். அதைத் தான் நாங்கள் முதல் 2 போட்டிகளிலும் செய்ய தவறி விட்டோம்.

Also Read: T20 World Cup 2021

இருப்பினும் இனிவரும் காலங்களில் இதே போன்று அதிரடியாக விளையாட விரும்புகிறோம். ரவி சாஸ்திரி மற்றும் சப்போர்ட் ஸ்டாப் ஆகியோருக்கு நன்றி. கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் எங்களது அணிக்காக சிறப்பான பணியை செய்துள்ளனர். மேலும் இந்திய அணி தற்போது நல்ல சூழ்நிலையில் இருக்க அவர்களும் முக்கிய காரணம்” என்று கேப்டன் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement