Advertisement

இந்திய அணியில் மீண்டும் கம்பேக்க் கொடுப்பேன் - வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
'I’m sure I’ll knock doors down again' - Varun Chakravarthy hopeful of India comeback
'I’m sure I’ll knock doors down again' - Varun Chakravarthy hopeful of India comeback (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 30, 2022 • 12:16 PM

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் 2021 டி20 உலக கோப்பை தொடரில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்தார். பெரிய அளவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் அழுத்தம் காரணமாக எதிர்பார்த்த அளவு அவர் சோபிக்கவில்லை.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 30, 2022 • 12:16 PM

இதனை தொடர்ந்து இந்திய அணில் இருந்து நீக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி ஐ பி எல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக நடந்து முடிந்த சீசனில் வெறும் ஆறு போட்டி மட்டுமே விளையாடினார். வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோனியே திணறினார். ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இருந்ததால் இந்திய அணியில் விரைவாக வரும் சக்கரவர்த்தி இடம் பிடித்தார்.

Trending

ஆனால் அதன்பின் தொடர் காயங்கள் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டு, தற்போது இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். அதன்படி தற்போது வருண் சக்ரவர்த்தி அணியில் இடம் பிடிக்க கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

இது குறித்து பேசிய வருண் சக்கரவர்த்தி , “தான் ஒரு லெக் ஸ்பின் வீசும் சாதாரண வீரர் தான். மற்றவர்களை விட பந்தை கொஞ்சம் வேகமாக வீசுவேன். என்னிடம் நிறைய வெரியசன் இருக்கிறது. ஆனால் நான் என்னை எப்போதுமே புதிர் நிறைந்த பந்துவீச்சாளர் என்று நான் கூறிக் கொண்டதில்லை.அது மீடியாவாக எனக்கு பெயர் கொடுத்தார்கள்.

முன்பு போல் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அதனால் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு எனது பந்துவீச்சு முறையை சீராக்கினேன். அப்போது நான் பந்து வீச ஓடும்போது தவறு செய்கிறேன் என்ற அப்போதுதான் கண்டுபிடித்தேன். தற்போது இதனை சரி செய்து வருகிறேன். அதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.

ஆனால் நிச்சயமாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவரும் எனது செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் விராட் கோலி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதுதான் கிரிக்கெட்டுடைய நியதி. நான் ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறேன். கொல்கத்தா அணி என்னை மீண்டும் தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வரும் சீசனில் சிறப்பாக பந்து வீசுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாட இருக்கிறேன். அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement