
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 2025 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் மற்றும் கிறிஸ் கேயில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் அரைசதத்தை நெருங்கிய கிறிஸ் கெயில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களில் ஆட்டமிழக்க, டுவைன் ஸ்மித் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய எட்வர்ட்ஸ், வால்டன் ஆகியோர் 9 ரன்களில், ராம்டின் 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் ஆஷ்லே நர்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களையும், நர்சிங் தியோனரைன் 3 சிக்ஸர்களுடன் என 35 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் மாஸ்டர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து மாஸ்டர்ஸ் தரப்பில் மாண்டி பனேசர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.